முல்லைத்தீவில் 4 குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில், நான்கு குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தானின் பங்குபற்றுதலுடன், அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் விநியோக திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின், ‘செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்’ திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒவ்வொன்றும், தலா 4 மில்லியன் பெறுமதியில், 20 குடிநீர் திட்டங்கள், இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட நான்கு இடங்களில், நனோ தொழிநுட்பத்துடன் கூடிய, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் பங்குபற்றுதலுடன், இன்று இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில், கூழாமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில், நான்கு மில்லியன் பெறுமதியான குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று மாலை 2.30 மணிக்கு இடம்பெற்றது.
இதில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில், காதலியார்சமணங்குளம், கற்சிலைமடு, ஒலுமடு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலும், குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews