உலகத்தமிழர் தேசியப் பேரவையினால் 5 இலட்சம் பெறுமதியான உதவித்திட்டம்

உலகத்தமிழர் தேசியப் பேரவையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து இலட்சம் பெறுமதியான உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்துக்குட்ப்பட்ட பகுதியில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு விதை கச்சான் வழங்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கமநல சேவை நேற்று காலை இடம்பெற்றது

உலகத்தமிழர் தேசியப் பேரவையினால்ஒதுக்கீடு செய்யப்பட்ட 450000 பெறுமதியில் 50 பேருக்கு இவ்வாறு விதை கச்சான் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

 

புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.சற்குணநேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி. ஜெயகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த உதவித்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

நிகழ்வில் கிராம அலுவலர்கள், உலகத்தமிழர் தேசியப் பேரவையின் உறுப்பினர்களான ந.பகீரதன், ஜெ.அருள்மதி, ச.வசந்தமாலா, ஜெ.தெய்வராணி உள்ளிடவர்களும் விவசாய திணைக்கள அதிகாரிகள்,பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்

இதனை தொடர்ந்து உலகத்தமிழர் தேசியப் பேரவையினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 50000 ரூபா பெறுமதியில் உடையார்கட்டு வடக்கு கலைமகள் முன்பள்ளி சிறார்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு கலைமகள் முன்பள்ளியில் கலைமகள் முன்பள்ளி ஆசிரியர் ர.தர்சினி தலைமையில் இடம்பெற்றது குறித்த நிகழ்வில் உலகத்தமிழர் தேசியப் பேரவையின் உறுப்பினர்களான ந.பகீரதன், ஜெ.அருள்மதி, ச.வசந்தமாலா, ஜெ.தெய்வராணி உள்ளிடவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்திருந்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews