
*_꧁. சித்திரை: 𝟮𝟬
꧂_*
*_ சனிக்கிழமை_
*
*_ 𝟬𝟯•𝟬𝟱•𝟮𝟬𝟮𝟱
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
எதிர்பாராத சில பணிகள் முடியும். தாய் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். தன வரவுகளால் கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் மேன்மையான சுழல் அமையும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிற்ப பணிகளில் திறமைகள் வெளிப்படும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
அஸ்வினி : அலைச்சல்கள் ஏற்படும்.
பரணி : மேன்மையான நாள்.
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
சில பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்க திட்டமிடுவீர்கள். அரசு சார்ந்த வழியில் ஆதரவு ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரோகிணி : ஆதரவு ஏற்படும்.
மிருகசீரிஷம் : மந்தத்தன்மை குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபாரத்தில் வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். சூழ்நிலை அறிந்து திறமைகளை வெளிப்படுத்தவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
மிருகசீரிஷம் : வியூகங்களை அறிவீர்கள்.
திருவாதிரை : புரிதல் உண்டாகும்.
புனர்பூசம் : முடிவு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
உறவுகளுக்குள் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான கனவுகளால் குழப்பங்கள் ஏற்படும். வேலையாட்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : குழப்பமான நாள்.
ஆயில்யம் : வாதங்களை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வெளியூர் செல்வது தொடர்பான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திருப்பணி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
மகம் : பயணங்கள் கைகூடும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
உறவுகளின் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சபை பணிகளில் ஆதரவு கிடைக்கும். சினம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
உத்திரம் : சுபமான நாள்.
அஸ்தம் : அனுகூலம் ஏற்படும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
சமூகம் சார்ந்த நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரம் தொடர்பான இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களால் சில பணிகளை முடிப்பீர்கள். திட்டமிட்ட பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
சித்திரை : புரிதல் அதிகரிக்கும்.
சுவாதி : எண்ணங்கள் மேம்படும்.
விசாகம் : மேன்மை ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வர்த்தகம் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
விசாகம் : செலவுகள் உண்டாகும்.
அனுஷம் : மாற்றமான நாள்.
கேட்டை : தேடல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
சமூகம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். உணவு சார்ந்த விஷயத்தில் கட்டுபாடு வேண்டும். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சுப காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.
அவிட்டம் : தடைகள் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
சாமர்த்தியமான செயல்பாடுகளால் காரியத்தில் அனுகூலம் ஏற்படும். தன வரவுகளால் நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் முன்னுரிமை ஏற்படும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
அவிட்டம் : அனுகூலம் ஏற்படும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
பூரட்டாதி : சிந்தனைகள் பிறக்கும்.
உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.
ரேவதி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
*┈┉┅━•• ••━┅┉┈*