யாழில் வாகனமொன்றை சுற்றிவளைத்த கடற்படையினர்.

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து மதுபான போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

வாகனமொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்ததை அவதானித்த கடற்படையினர் குறித்த வாகனத்தினை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது வாகனத்திலிருந்து 30 பெட்டிகளில் 750 மதுபான போத்தல்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Gallery Gallery Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews