வாயில் நெருப்பால் சுட்ட தாய்….!

கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட விநாயகர்  குடியிருப்பு பகுதியில் 08.10.2021  அன்று சிறுமிக்கு  நெருப்பால்   சுட்டதாய் தொடர்பில் பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
தாயார் சமைத்து வைத்த உணவின்  பப்படத்தை தனது 5 வயது  சிறுமி தாயாருக்கு தெரியாமல்  எடுத்துசாப்பிட்ட காரணத்தினால்  தாயார் பெற்ற குழந்தைக்கு  வாய்பகுதியில்  நெருப்பால் சுட்டுள்ளார்.
சம்பவத்தை அவதானித்த சிறுமியின்    பேரன் அக்கரையான் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த தகவலிற்கமைய தாயார்  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 09.10.2021 இன்றையதினம் சிறுமி கிளிநொச்சி  வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின்  தந்தை   தொழிலுக்குச் சென்ற சமையம் இச்சம்பவம்  நடைபெற்றுள்ளது.
அக்கரையான்   பொலிசார்  மேலதிக விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.  இதேவேளை இன்றையதினம் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரையான் பொலிசார்  தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews