
*_꧁. பங்குனி: 31
꧂_*
*_ சனிக்கிழமை_
*
*_ 13 – 04- 2024
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பற்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்.
அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பரணி : பொலிவு மேம்படும்.
கிருத்திகை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் ராசி:
_*
மனதளவில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை அவசியம். நண்பர்களிடத்தில் மதிப்பு மேம்படும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : தடுமாற்றம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம் -ராசி:
_*
நினைத்த சில பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.
மிருகசீரிஷம் : அலைச்சல் அதிகரிக்கும்.
திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.
புனர்பூசம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் -ராசி:
_*
குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவு ஏற்படும். கலை துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
புனர்பூசம் : அமைதியான நாள்.
பூசம் : தெளிவு ஏற்படும்.
ஆயில்யம் : ஆர்வம் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் -ராசி:
_*
சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவு கைகொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பயணங்களால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தநிலை குறையும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்.
மகம் : பொறுப்பறிந்து செயல்படுவீர்கள்.
பூரம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி -ராசி:
_*
குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்.
உத்திரம் : செலவுகள் உண்டாகும்.
அஸ்தம் : சிந்தித்துச் செயல்படவும்.
சித்திரை : செல்வாக்கு அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் -ராசி:
_*
எதிலும் மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் செயல்படுவது நல்லது. சிக்கலான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனை மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
சித்திரை : சிக்கல்களை சமாளிப்பீர்கள்.
சுவாதி : மாற்றம் உண்டாகும்.
விசாகம் : இழுபறிகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம்- ராசி:
_*
சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். புதிய தொழில்நுட்பம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முதலீடு குறித்த ஆலோசனை கிடைக்கும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
விசாகம் : உதவி கிடைக்கும்.
அனுஷம் : மதிப்பு மேம்படும்.
கேட்டை : ஆலோசனை கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு -ராசி:
_*
இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தேவைக்கேற்ப தனவரவுகள் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். பயணங்களின்போது அலைபேசிகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்களுடன் அதிக நேரம் உரையாடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
மூலம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
பூராடம் : துரிதம் உண்டாகும்.
உத்திராடம் : மாற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் -ராசி:
_*
மனதளவில் புதிய சிந்தனை உண்டாகும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உயர் கல்வி தொடர்பான குழப்பத்திற்கு தெளிவு ஏற்படும். உல்லாச பயணம் செல்வது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடினமான விஷயங்களில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
உத்திராடம் : தனவரவுகள் கிடைக்கும்.
திருவோணம் : தெளிவு ஏற்படும்.
அவிட்டம் : நுட்பங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் -ராசி.
_*
திட்டமிட்ட பணிகள் காலதாமதமாகி நிறைவேறும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : சந்திப்பு ஏற்படும்.
பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் -ராசி:
_*
தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். திறமைக்கு உண்டான வாய்ப்பு கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த தடுமாற்றம் நீங்கும். தடை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.
உத்திரட்டாதி : பிரச்சனைகள் மறையும்.
ரேவதி : தடுமாற்றம் நீங்கும்.
*┈┉┅━•• ••━┅┉┈*