கிளி பீப்பிள் (Kili People) இணை ஒழுங்கமைப்பில் கிளிநொச்சியில் மின் தகன மயானம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளி பீப்பிள் (Kili People) இணை ஒழுங்கமைப்பில் கிளிநொச்சியில் மின் தகன மயானம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் உடல் தகனத்திற்காக வவுனியா உள்ளிட்ட பகுதிகளிற்கு அனுப்பப்பட்டு வருவதனால் மக்கள் பொருளாதாரம் உள்ளிட்ட பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்துக்கென தனியான மின் தகன நிலையமொன்றை திருநகர் மயானத்தில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ந்து மயான அபிவிருத்திக் குழு ஒன்றிணை அமைத்து அதனூடாக இச்செயல்த்திட்டம் நிறைவேற்றும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.
சுமார் இருபத்தி ஐந்து மில்லியன் ரூபாக்கள் தேவைப்படுகின்ற போதும் இலங்கை அரச இயந்திரங்கள் நிதி வழங்க மறுக்கப்பட்ட நிலையில் தாயக மற்றும் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்புடன் இந்தத் திட்டம் நிறைவேற்ற முடிவுசெய்யப்பட்டது.
கிளிநொச்சி மயான அபிவிருத்திக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க கிளி பீப்பிள் அமைப்பினால் கடந்த சனிக்கிழமை ஒக்டோபர் 2ம் திகதி மெய்நிகர் வழியாக கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திட்டம் தொடர்பான செயல்த்திட்ட அதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
அன்றைய கலந்துரையாடலில் நலன் விரும்பிகள் சுமார் நான்கு மில்லியன் ரூபாக்களை (Rs 4,250,000.00) நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர்.
கிளிநொச்சி வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் இத்திட்டத்தின் செலவில் மூன்றில் ஒரு பங்கினை குறிப்பாக எட்டு மில்லியன் ரூபாக்களை நன்கொடையாக வழங்க முன்வந்ததாக கரைச்சிப் பிரதேசசபை தவிசாளர் வேழமாலிகிதன் கலந்துரையாடவில் தெரிவித்திருந்தார்.
இத்திட்டத்துக்கு அன்றைய கலந்துரையாடலில் நிகழ்வுடன் சுமார் பன்னிரண்டு மில்லியன்கள் ரூபாக்களுக்கு மேல் சேகரித்த நிலையில் மீதி நிதிக்காக நல்மனம் கொண்ட கொடையாளிகளையும் தொண்டு அமைப்புக்களையும் கிளி பீப்பிள் அமைப்பு அனைவரது சார்பாகவும் வேண்டி நிற்பதாக அதன் தலைவர் வைத்தியர் சதானந்தன் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் சுமார் நாற்பது பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நலன் விரும்பிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews