போரதீவுப்பற்று கிராமசேவகர் பிரிவுகளில் சிறுவர் தின நிகழ்வு.

போரதீவுப்பற்றிலுள்ள 43 கிராமசேவகர் பிரிவிலும் சிறுவர் கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டு சுற்றாடலை மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம்முறை அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள் எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அத்தோடு பிரதேச செயலகப்பிரிவுகளில் பட்டினியற்ற மரங்கள் நிறைந்த தார்மீக தேசமொன்றைக் கட்டியெழுப்பும் வகையில் பயனுள்ள பலாமரக்கன்றுகளும் நடப்பட்டு வருகின்றன.

இதற்கமைய போரதீவுப்பற்றில் தெரிவுசெய்யப்பட்ட 12 கிராமசேவகர் பிரிவுகளில் 300 மரக்கன்றுகள் நடுகை செய்யப்படவுள்ளன. இதற்கான மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேசசெயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது உதவிப்பிரதேசசெயலாளர் எஸ்.புவனேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். அத்துடன் பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews