மனைவியின் சகோதரனால் தாக்கப்பட்டவர் மரணம்!

குடும்பத் தகராறில் தாக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரழந்தார்.
புதிய காத்தான்குடி 2 கப்பல் ஆலிம் வீதியில் வசித்து வந்த 28 வயதுடைய முஹம்மது முஸ்பீர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவிக்கு கணவனுக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது, மனைவியின் சகோதரன் இவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது காயமடைந்த நபர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, நேற்று மாலை உயிரழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக இவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் இவரின் மனைவியின் சகோதரனை, காத்தான்குடி பொலிஸார் கைது செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews