இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க கோரி யாழில் இன்று பேரணி…!

இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி,  வட மாகாண மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் பேரணியொன்றை நடத்தவுள்ளதாக  அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றையதினம்(04)  இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பேரணியில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

இன்று காலை 10:30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பு ஆரம்பமாகும் இந்தப் பேரணியில் ஜனாதிபதிக்கான மகஜரை வடக்கு மாகாண ஆளுநர் ஊடாகவும், இந்தியப் பிரதமருக்கான மகஜரை இந்தியத் துணைத் தூதுவர் ஊடாகவும் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews