ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதுடன் குறித்த மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த மாநாட்டில் சீனா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews