கொழும்பு மாநகரசபை மேஜர் ரோசி சேனநாயக்கா பொதுஜன முன்னணியில் இணைவாரா?

கொழும்பு மாநகரசபை மேஜர் ரோசி சேனநாயக்கா தொடர்பாக ஐக்கிய
தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்காவுக்கும் ஐக்கிய மக்கள்
சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் கடும் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த
பாராளுமன்றத் தேர்தலில் தனது மகனை வேட்பாளராக நிறுத்தியதனால் ரணில்
அதிர்ப்தி அடைந்துள்ளார். தனது தோல்விக்கு இந் நியமனமும் காரணம் என அவர்
கருதுகின்றார். தான் சொல்கிறபடி ரோசி சேனநாயக்கா நடப்பதில்லை என சஜித்
பிரேமதாசாவுக்கு அதிர்ப்தி ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபை மேஜராக
முன்னால் பிரதி மேஜர் டைட்டஸ் பெரொரோவை நியமிக்கும் எண்ணமும் ரணிலுக்கு
உண்டு. கொரோனா நிவாரணம் தொடர்பாக கொழும்பு மாநகரசபை மக்களுக்கு அவை
உரிய வகையில் வழங்கப்படவில்லை எனக் கூறி ரோசி சேனநாயக்கா மாநகரசபை
ஆணையாளருடன் முரண்பட்டுள்ளார். இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கும் ரோசி
சேனநாயக்கா கொண்டு சென்றுள்ளார். ஜனாதிபதியும் உடனடியாக ஆணையாளருடன்
தொடர்பு கொண்டு எவ்வித காலதாமதமும் இன்றி நிவாரணத்தை வழங்க ஏற்பாடு
செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். ஜனாதிபதியின் இச்
செயற்பாடுரூபவ் ரணில் மீதும் சஜித் மீதும் கொண்ட அதிர்ப்தி என்பன ரோசி சேனநாயக்கா பொதுஜன முன்னணியில் இணைந்துவிடுவாரா என்ற சந்தேகத்தைக்
கிளப்பியுள்ளது.
கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 60 உறுப்பினர்கள்
உள்ளனர். எதிர்க்கட்சிக்கு 59 உறுப்பினர்கள் இருக்கின்றனர். மனோகணேசன்
தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால்
கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தில் யார் இருப்பது என்பதை
தீர்மானிப்பவராக மனோகணேசன் உள்ளார். கொழும்பு மாநகரசபை கொழும்பு
திம்பிரிகசாயா என்கின்ற இரு பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கியது. இதில்
கொழும்புப் பிரதேச செயலகப் பிரிவல் தமிழர்களே அதிகமாக வாழ்கின்றனர்.
இரண்டாம் நிலையில் முஸ்லீம்களுமரூபவ்; மூன்றாம் நிலையில் சிங்களவர்களும்
உள்ளனர். திம்பிரிகசாய பிரதேச செயலர் பிரிவில் முதலாம் நிலையில்
சிங்களவர்களும் இரண்டாம் நிலையில் தமிழர்களும் மூன்றாம் நிலையில்
முஸ்லீம்களும் உள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews