மின்னல் தாக்கி ஒருவர் பலி, ஒருவர் காயம்…! வெற்றிலைக்கேணியில் சம்பவம்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கரவலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை ஒருவர் மின்னல் தாக்கி பலியானதுடன் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் இன்று மதியம் 12:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.மின்னல் தாக்கியதில் இறந்தவர் 35 வயதுடைய  ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் எனும்  இரண்டு பிள்ளைகளின் தந்தையாவர். மேலதிக விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews