யாழ்.கொடிகாமம்வான் ஒன்றில் வந்த கும்பல் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயம்..!

யாழ்.கொடிகாமம் – கரம்பகம் பகுதியில் வாகனம் ஒன்றில் வந்த கும்பல் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

குறித்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. வான் ஒன்றில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அப்பகுதியில் கரம்பகம் பகுதியை சேர்ந்தவர்

மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews