சரணாலயத்துக்குள் நுழைந்து விலங்குகளை வேட்டையாடிய ஐவர் கைது.

விக்டோரியா ரந்தெனிய மற்றும் ரந்தெம்பே ஆகிய சரணாலயங்களிலுள்ள விலங்குகளை வேட்டையாடி வந்த ஐவரை கீர்த்திபண்டாபுர வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய துப்பாக்கி, வெடி மருந்துகள், வெடிப்பொருட்கள் மற்றும் இறைச்சியை கொண்டு செல்வதற்குப் பயன்படுத்திய ஓட்டோ, மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி மிகவும் சூட்சுமுமான முறையில் சரணாலயத்துக்குள் நுழைந்து விலங்குகளை வேட்டையாடியுள்ளதுடன் அவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் குறித்த ஐவரும் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் வலப்பனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews