வரணி பிரதேச வைத்திய சாலை ஆண் பெண் விடுதிக்கு அடிக்கல் நாட்டுவிழா…!

வரணி பிரதேச வைத்திய சாலைக்கான ஆண் பெண் விடுதி மற்றும் மகப்பேற்று மனைக்கான  அடிக்கல் நாட்டுவிழா இன்று  அதன் பொறுப்பு மருத்துவ அதிகாரி பசுபதி அச்சுதன் தலமையில் இடம் பெற்றது.

உலக சுகாதார நிறுவனத்தின்  pssp திட்டத்தின்  கீழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை திட்டமிடல் மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ்   ரூபா 15 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ளன.
இதில்  ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்குகளை பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் பசுபதி அச்சுதன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை திட்டமிடல் மருத்துவ அதிகாரி மோகன்குமார், பல்வைத்திய நிபுணர் திருமதி கீர்த்தனா குணேஸ்வரன், மருத்து அதிகாரி யோ.தினேஸ், நலன்புரி சங்க உறுப்பினர் திரு.நவரட்டசாமி, பொருளாளர் எஸ்.மயூரன், ஆகியோர் ஏற்றினர்.

 

தொடர்ந்து நாட்கல்லினை பொறுப்பு வைத்திய அதிகாரி ப.அச்சுதன்,திட்டமிடல் வைத்திய அதிகாரி மோகனகுமார், பல் வைத்திய நிபுணர் திருமதி கீர்தனா, மருத்துவ அதிகாரி யோ.தினேஸ்,பொது சுகாதார பரிசோதகர் எஸ் நிஜந்தானா,   நலன்புரி சங்க உறுப்பினர் திரு.நவரட்டசாமி, பொருளாளர் எஸ்.மயூரன், உட்பட பலரும் நாட்டினர்.
இதில் மருத்துவ மனை பொறுப்பு மருத்துவ அதிகாரி தலமையில் மருத்துவ மனை பணியாளர்கள் பதினைந்து பேர்வரை கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews