ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் கடல் பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்:

ராமேஸ்வரம் செப் 08,

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து வீசிவரும் சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அனுமதி அளிக்கப்படாத நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடற்பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர.; நேற்று மாலை முதல் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ரத்து செய்துதனர்.

இதனால் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்குள் செல்லாமல் தங்களது படகுகளை பாதுகாப்பாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடல் பகுதி சுமார் 500 மீட்டருக்கும் மேலாக உள்வாங்கியது. இதனால் அப்பகுதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய நாட்டுபடகுகள் தரைதட்டியாது. மேலும் சில படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளது.

தரைதட்டிய நாட்டு படகுகளை மீனவர்கள் மீட்டு கடலில் ஆழமான பகுதிக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் கடல் உள்வாங்கியதால் கடற்கரையோரங்களில் வசிக்கக்கூடிய அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான நட்சத்திர மீன், கடல் அட்டை உள்ளிட்டவைகள் வெளியே தெரிந்து வருகின்றன.

இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு ராமேஸ்வரத்தில் தூண்டில் வளைவுகளுடன் கூடிய துறைமுகம் அமைத்து தர வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews