கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது! –

கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்ற டோஸிலீஸுமபி என்ற மருந்தை, நோய் நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் வழங்கக் கூடாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருந்தியல் தொடர்பான பேராசிரியர் பிரியதர்ஷினி கலபத்தி தெரிவித்துள்ளார்.
குறித்த நோயாளர்களுக்கு இந்த மருந்தை வழங்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் பேராசிரியர் பிரியதர்ஷினி கலபத்தி
குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மருந்து கொவிட் தொற்றாளர்களுக்கு வழங்குவதற்கு பொருத்தமான இரண்டாவது மருந்தாக உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த டோஸிலீஸுமபி மருந்து கொவிட் நோய்க்காக தயாரிக்கப்பட்ட மருந்து அல்ல. இது மூட்டுவாதத்திற்காக தயாரிக்கப்பட்ட மருந்தாகும். தற்போது கொவிட் நோயை தடுப்பதற்கு உள்ள ஒரு சிறந்த மருந்து தடுப்பூசியே என்று பேராசிரியர் பிரியதர்ஷினி கலபத்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைவரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஒருவர் சளி இருமல் போன்றவற்றினால் பீடிக்கப்படுமிடத்து, அவர் கொவிட் தொற்றாளர் என யூகித்து சிகிச்சை அளிப்பது மிகவும் சிறந்தது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews