வலிவடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை கையேற்பதில் உரிமையாளர்கள் தயக்கம்!அரச அதிபர்

வலி வடக்கில் ராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்  மாவட்ட அரசாங்க அதிபர் அ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார்

மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன் துறையில்  ராணுவத்தினிடமிருந்தும் கடற்படை யினரிடமிருந்தும்  108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது

படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபொதுமக்களின்  காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகள் நீண்ட காலமாக இடம் பெற்றாலும் சிறிது சிறிதாக காணிகள்  விடுவிக்கப்படுகின்ற போதிலும் ஒரு இடர்பாடு காணப்படுகின்றது

முகாம்களில் இருக்கின்றவர்களை நாங்கள் விடுவிக்கப்பட்ட இடங்களில்  குடியேற்றக்கூடியவாறு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்

விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காணிகளை முழுமையாக கையேற்று அதனை உரிய பாவணைக்கு உட்படுத்தினால் மாத்திரமே தொடர்ச்சியாக காணிகளை விடுவிப்பதற்கு உதவியாக இருக்கும்

விடுவிக்கப்பட்ட காணிகளில் ராணுவத்தினர் இருந்து வெளியேறிய பின்னர் அந்த கட்டிடங்களை  அவர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள் எனவே காணி உரிமையாளர்கள் தமது காணிகளை கை ஏற்கத்தவறுவதால்

அந்த கட்டிட  பொருட்களை சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்கின்ற நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படுகின்றது

எனவே விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் தங்களுடைய சொந்த காணிகளை கை ஏற்பதன் மூலமே நாங்கள் மேலதிகமாக படையினரிடம் உள்ள காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்

விடுவிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தமது காணிகளை பொறுப்பேற்பதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்,

Recommended For You

About the Author: Editor Elukainews