சர்வதேச நீதிப் பொறிமுறையினூடாகவே தீர்வினை பெற முடியும்:நாகேந்திரன் ஆசா –

திருகோணமலையில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கத்தினரால் செய்தியாளர் சந்திப்பொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட ஓஎம்பி அலுவலகத்தினை தாம் முற்றுமுழுதாக எதிர்ப்பதாகவும் தமது எதிர்ப்பை மீறியும், குறித்த அலுவலகம் நிறுவப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் வெறும் கண்துடைப்பாக உள்ளதாக காணாமல் ஆக்கப் பட்டவர்களது சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆசா தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களது தினமான இன்று நாட்டில் தற்போதுள்ள முடக்கம் நிறைந்த சூழலில் எஞ்சியுள்ள தமது உறவுகளை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆசா இந்த கோரிக்கையை விடுத்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews