மூச்சுத் திணறலுடன் அனுமதிக்கப்பட்ட 22 வயதான பெண் உட்பட இருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.. |

யாழ்.பருத்தித்துறை – மந்திகை வைத்தியசாலையில் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் அனுமதிக்கப்பட்ட 22 வயதான இளம் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை சேர்ந்த குறித்த பெண், மூன்று நாள்களாக காய்ச்சலுடன் சுகயீனமாக இருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மூச்சு எடுப்பத்தில் சிரமப்பட்டுள்ளார்.

இதனால் குறித்த பெண்ணை, மந்திகை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அனுமதித்தபோது, மருத்துவ பரிசோதனையில் அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அப்பெண்ணின் மாதிரிகளில் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுத்தபோது,  அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதேவேளை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் (69 வயது)

மந்திகை வைத்தியசாலைக்கு அன்புலன்ஸில் அழைத்துவரப்பட்டு வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews