நாட்டை தொடர்ந்து 03 அல்லது 04 வாரங்களுக்காவது முடக்குங்கள்- திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி –

நாட்டை தொடர்ந்து 3 அல்லது 4 வாரங்களுக்காவது முடக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சறுத்தலில் நாட்டை முடக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது மிகவும் அவசியமானது. நாட்டின் பொருளாதாரத்தை விடவும் நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமையளிக்க வேண்டும். இருந்த போதிலும் இன்று நாடு முழுமையாக மூடப்படவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்

நாட்டை முழுமையாக மூடினால் தொற்றாளர்களை அடையாளம் காணல், பிரதேசங்களைத் தனிமைப்படுத்தல், மேலும் தொற்று சமூகமயமாவதைத் தடுக்க முடியும்.

எனினும் நாட்டின் பொருளாதாரத்தை காரணம்காட்டி ஆடைத்தொழிற்சாலை என பல விடயங்களுக்கு சந்தர்ப்பமளித்துள்ளனர்.

கொழும்பு நகருக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்துச் செல்கின்றன. மக்கள் இன்னும் வீதிகளில் நடமாடுகின்றனர் ஒன்றுகூடுகின்றனர். எவ்வாறு நாட்டை முடக்கிவைத்திருப்பதன் ஊடாக இலக்கு வைக்கப்பட்ட பிரதிபலனை அடையமுடியும்? குறைந்தது 3 அல்லது 4 வாரங்களுக்காவது நாட்டை முடக்கி வைத்தால்தான் தொற்றிலிருந்து ஓரளவுக்கு நாட்டைக் காப்பாற்ற முடியும்.

கொரோனா தொற்று என்பது சாதாரண காய்ச்சல், தடிமன் போன்றதென்று ஆளுங்கட்சி உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். முழு உலகமும் இந்த தொற்றானது அபாயகரமானதென்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியின் இந்த கருத்தினால் மக்கள் மத்தியில் கொவிட் தொற்று மீதான அச்சம் குறைந்து சுகாதார பழக்க வழக்கங்களையும் உதாசீனப்படுத்தும் நிலைமை ஏற்படலாம்.

Recommended For You

About the Author: Editor Elukainews