யாழ்.மாவட்டத்தில் 72 பேர் உட்பட வடக்கில் 93 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு முடிவு.. |

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 72 பேர் உட்பட வடக்கில் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 528 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருந்த நிலையில் 93 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில்  72 பேருக்கு தொற்று,

மானிப்பாய் பிரதேச வைத்திய சாலையில் – 27 பேர், யாழ். மாநாகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 20 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் – 09 பேர்,

யாழ். போதனா வைத்தியசாலையில் – 09 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் – 02 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் – 02 பேர்,

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 02 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் – ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் – 04 பேருக்கு தொற்று. 

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் – 03 பேர், வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – ஒருவர்,

வவுனியா மாவட்டத்தில் – 13 பேருக்கு தொற்று, 

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 08 பேர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் – 05 பேர்,

மன்னார் மாவட்டத்தில் – 03 பேருக்கு தொற்று. 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் – 03 பேர்

மூன்று முறிப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில் – ஒருவர்

Recommended For You

About the Author: Editor Elukainews