கிளிநொச்சியில் தொற்று நீக்கி விசிறிய ஊடகவியலாளர்கள்…,!

கிளிநொச்சி மாவட்டத்திலும்  கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது .இதுவரையில் கிளிநொச்சி மாவட்டத்தில்  15மரணங்களும் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் (25)இன்று கிளிநொச்சி மாவட்ட ஊடக அமைய ஊடகவியலாளர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் பொது இடங்கள் மற்றும் பொலிஸ் நிலையம் மற்றும் தனிமைப்படுத்தலுக்குள்ளாகி மீண்ட வீடுகளிற்குமாக தொற்று நீக்கி விசிறப்பட்டது.

மக்களின் நலன் கருதியும் கொரோனா தொற்றிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பாரிய அளவில் சேவை செய்யும் சுகாதார துறையினருக்கு தாமும் ஒரு கை கொடுக்கும் முகமாகவும் இன்றைய தினம் குறித்த தொற்று நீக்கும் பணியில் ஈடுபட்டதாக குறித்த ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews