மட்டு.கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் மூன்று இலட்சம் பெறுமதியான மாலை பறிப்பு –

மட்டக்களப்பு-கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியின் தங்க மாலையைக்கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் மற்றுமொரு வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகே தெரிவித்துள்ளார். விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி தனியாக மளிகைக்கடைக்குச்சென்று திரும்பும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த 22 வயதுடைய வாலிபர் சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை அபகரித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டடிருந்த சீசீரீவீ கெமராவில் பதிவாகியிருந்தது.

குறித்த நபரை கைதுசெய்த பொலிஸார் மாலையை விற்பனை செய்வதற்கு முற்பட்ட வாழைச்சேனை மீன்பிடி துறைமுகப்பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கைதானவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 9 ஆந்திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ வீரர் மேலும் பல குற்றசெயல்களுடன் சம்பந்தப்பட்டவரென பொலிஸார் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews