மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம்பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கல் –

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்த பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 64 382 குடும்பங்களுக்கு 39 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய கிராமங்களான திராய்மடு ,பனிச்சையடி கொக்குவில் , சத்துருக்கொண்டான் , பாலமீன்மடு ஆகிய ஐந்து கிராமங்களில் ஊடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களில் சமுர்த்தி கொடுப்பனவுக்காக விண்ணப்பிக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலின் உள்ளவர்களின் முன்னுரிமைக்கு அமைய வாழ்வாதார கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.மாவட்டத்திற்கான கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு திராய்மடு கிராமசேவையாளர் பிரிவில் உள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், உதவி பிரதேச செயலாளர் ஜி .அருணன் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ .சுதர்சன் கிராமசேவை உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .

Recommended For You

About the Author: Editor Elukainews