காரைதீவு கரடித்தோட்டம் சமுர்த்தி காரியாலயம் பூட்டு…!

கரடித்தோட்டம் சமுர்த்தி காரியாலய முகாமையாளருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும் இன்று அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

பரிசோதனைகளின் போது மேலும் ஒருவர்அடையாளம் காணப்பட்டுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர் தெரிவித்தார்.இந்நிலையில் காரைதீவு கரடித்தோட்டம் சமுர்த்தி காரியாலயம் இன்று மூடப்பட்டுள்ளதுடன் குறித்த நிலையத்தினூடானன அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிராந்தியத்தில் நேற்று 105 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதுடன் மூன்று மரணங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் காரைதீவு பிரதேசத்தில் நேற்று 10 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews