மட்டக்களப்பில் 24 மணி நேரத்தில் 141 தொற்றாளர்கள் அடையாளம் -!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் 141 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஐந்து மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஒருவார காலப்பகுதியில் 2322 கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் வரை 36 மரணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலை தொடர்ந்து ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இவ்வாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews