அமைச்சர் உதய கம்மன்பில கூறிய கருத்தினாலேயே மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டது! –

அமைச்சர் உதய கம்மன்பில கூறிய போலியான தகவலால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருப்பின் அது ஆனந்த பாலித்த தெரிவித்த கருத்தினால் அல்ல. அமைச்சர் உதய கம்மன்பில கூறிய கருத்தினால்தான் என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சுமத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் இன்று (23) நடைபெற்ற போது, கருத்துரைத்த அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஸன் பாதுக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாகக் கூறியமைக்காக கனியவள துறை பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த கைதுசெய்யப்பட்டார்.

எனினும், எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் முயற்சியால் எமது சட்டத்தரணிகள் முன்னிலையாகி அவரை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது நீதவான் மிக முக்கியமான ஒரு விடயத்தைக் கூறினார். கருத்துக்கூறும் சுதந்திரத்துக்கு பொலிஸாரினால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது.

ஆனந்த பாலித்த கூறிய கருத்தில் பொய்யான விடயங்கள் எதுவும் இல்லை என்று நீதவான் தெரிவித்திருந்தார்.

போலியான தகவலால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருப்பின் அது ஆனந்த பாலித்த தெரிவித்த கருத்தினால் இல்லை. அரசாங்கத்திடம் டொலர் இல்லை இதன்காரணமாகவே எரிபொருள் விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டது.

எனவே எரிபொருளை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று அமைச்சர் உதய கம்மன்பில கூறியதன் காரணமாகவே மக்கள் மத்தியில் எரிபொருள் தொடர்பில் அச்சநிலை ஏற்பட்டதாகவும் எமது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

அவ்வாறான கருத்தைக் கூறிய அமைச்சர் வெளியில் இருக்கும்போது உண்மையான கதையைக் கூறியவரை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதற்கு முயற்சித்த கீழ்த்தரமான அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான ஐக்கிய சேவை சங்கம் கண்டனம் தெரிவிக்கின்றது.

அதேபோன்று நீதிச் சேவைகள் ஆணைக்குழு எவ்வாறு செயற்பட்டாலும் இந்நாட்டின் நீதித்துறை தொடர்பில் எமக்கும் இன்னும் நம்பிக்கை உள்ளது.

புலனாய்வுப் பிரிவு தொடர்பில் வரலாறு முதல் பேசிக்கொண்டு இருக்கின்றோம்.

இந்நாட்டின் புலனாய்வுத் துறையானது மிக முக்கியமான ஓர் அறிக்கையை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்துள்ளது. ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பிலான அறிக்கையே அது.

அரசாங்கத்தின் புலனாய்வுத்துறை அதேபோன்று அமைச்சர்கள் 847 ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை 160,847 கணக்கிட்டுக் காட்டியுள்ளனர்.

அதுமட்டுமன்றி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 10,213 பங்கேற்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் வந்தனர், வரவில்லை என்பது மட்டுமே இதில் குறிப்பிடப்படவில்லை

Recommended For You

About the Author: Editor Elukainews