அம்பாறையில் பொதுமுடக்கம் – மருந்து பொருட்கள் தபால் ஊடாக விநியோகம்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  நேற்றிரவு 10 மணிமுதல் அமுலுக்கு வந்துள்ள பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் அத்தியவசியத் தேவை தவிர்ந்து வழமையாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இன்று  அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மக்கள் முழுமையாக கடைப்பிடித்து வருவதுடன்  இன்று  காலையில் பிரதான நகரங்கள் உட்பட கரையோர பிரதேசங்களில் உள்ள முக்கிய  பொது இடங்கள் யாவும்    வீதிகள் அனைத்தும் முற்றாக வெறிச்சோடி காணப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மதித்து மக்கள்  வீடுகளில் முடங்கி உள்ளதுடன் அத்தியவசிய சேவை வழமைபோன்று இயங்கிவருவதுடன் மருந்தகங்கள் திறந்துள்ளதை காண முடிகிறது.

இதே வேளை   நீண்டகால நோய்வாய்ப்பட்டோர், கிளினிக் மூலம் மருந்துகளை பெறுவோரின் நன்மைகருதி தபால் திணைக்கள தபாலகங்கள் ஊடக மருந்துகள் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தபால் திணைக்கள கடுகதி சேவையும் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் பாதுகாப்பு தரப்பினரும் வழமை போன்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews