போலி இலக்கத் தகட்டுடனான காரொன்று இன்று காலை தம்புள்ளையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போலி இலக்கத்தகட்டுடான கார் ஒன்றை காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் அதே இலக்கத்தில் மற்றொரு கார் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உண்மையான இலக்கத்தகட்டின் மேல் போலியான முறையில் ஸ்ரிக்கர் வடிவில் இலக்கத்தகட்டை அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த போலி இலக்கத் தகட்டுடைய காரை பொலிஸார் தேடி வந்த நிலையில் இன்று காலை தம்புள்ளையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
முன்னர் கைப்பற்றப்பட்ட கார் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது கைப்பற்றப்பட்ட காரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது