மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யா.

துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உருவாகி வரும் ஆழமான பொருளாதார உறவுகள் குறித்து மேற்கத்திய நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் போக்கு தொடங்கியதில் இருந்தே பல்வேறு மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகள் மற்றும் இராஜதந்திர உறவு முறிவு ஆகியவற்றை அறிவித்து வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் புதிய உறவு | Economic Relations Between Turkey And Russia

 

இவற்றில் ஐரோப்பிய நாடான துருக்கி, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையுடன் துருக்கி இணைந்து உக்ரைனிய தானியங்களை வெளியேற்றும் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் இருவரும் போக்குவரத்து விவசாயம், நிதி மற்றும் கட்டுமானத் தொழில்களில் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர்.

இந்தநிலையில், துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உருவாகி வரும் ஆழமான பொருளாதார உறவுகள் குறித்து மேற்கத்திய நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews