ஆப்கானிஸ்தானில் குண்டு தாக்குதலில் மதகுரு கொல்லப்பட்டார்.

தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அதேநேரம், பெண் கல்விக்கு ஆதரவாக செயல்பட்ட முக்கிய ஆப்கானிஸ்தான் மதகுரு கொல்லப்பட்டார்.ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி என்பவரே காபூலில் தற்கொலை குண்டுவெடிப்பில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

குறித்த மதத் தலைவரை குறிவைத்து ஒரு செயற்கை பிளாஸ்டிக் கால் ஒன்றுக்குள் மறைத்து வைத்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுள்ளது. இந்த தாக்குதலுக்கு, இஸ்லாமிய அரசு (ஐஎஸ்ஐஎஸ்) குழு,பொறுப்பேற்றது.

ஷேக் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தின் ஆதரவாளராகவும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் மற்றும் தலிபான்களின் ஆட்சியை எதிர்க்கும் ஐஎஸ்ஐஎஸ் இன் பிராந்திய துணை அமைப்பான, கோஹ்ராசன ஜிஹாதிஸ்ட் போராளிக் குழுவின் முக்கிய விமர்சகராகவும் இருந்தார்.

கடந்த ஆண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் கொல்லப்பட்ட மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவராவார்.

இது ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய இராட்சியத்துக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஒரு மூத்த தலிபான் அதிகாரி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். ஷேக் ஹக்கானி இதற்கு முன்பு இரண்டு படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews