ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் தேன்நிலவு ஐந்து வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. !அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி பற்றி செயலாற்றுபவர்கள்
குறிப்பாக தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த நெருக்கடியை முதலில் கோட்பாட்டு
ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நெருக்கடி என்பது பெரும்தேசிய வாதத்தின்
லிபரல் பிரிவு.  பெரும்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவுர.  ஒடுக்கப்படும் தேசிய
இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள் புவிசார் அரசியல்காறரான இந்தியா. பூகோள
அரசியல்காறர்களான சீனா. அமெரிக்கா என்பவற்றின் நலன்களுக்கிடையேயான
மோதலின் விளைவாகும். எனவே இதற்கான தீர்வு இந்த நலன்கள் சந்திக்கின்ற புள்ளி
தான்.

தீர்வு ஏதோ ஒரு வகையில் இதனுடன் சம்பந்தப்பட்ட தரப்புகளின் நலன்களை
சமநிலைப்படுத்த வேண்டும்.
இங்கே சில தரப்புகளுக்கு மட்டும் சாதகமாக தீர்வு அமையுமாயின் ஒதுக்கப்பட்ட
தரப்புக்கள் குழப்பங்களை விளைவிக்கவே முயற்சிக்கும். தற்போது இதுவே இடம்
பெறுகின்றது. ரணில் ஜனாதிபதியாக பதவியேற்றமை ஒரு சில தரப்புக்களை மட்டும்
திருப்திப்படுத்தியுள்ளதே தவிர விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களையும்
திருப்திப்படுத்தவில்லை.

சீனாவின் கப்பல் வருகையும். அதனுடன் கூட பாகிஸ்தானின்
கப்பல் வருகையும். சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் தோல்வியடையும் நிலை
ஏற்பட்டுள்ளமையும் இதன் வெளிப்பாடுகளே!

மீண்டும் மனம் தளராத விக்கிரமன் போல ரணில் திரும்பத்திரும்ப முயற்சிகளைச் செய்தாலும் அனைத்தும் பின்னடைவுகளையே சந்தித்து வருகின்றன. அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தக் கூடிய சமநிலைப்புள்ளி இதுவரை
கண்டுபிடிக்காமையே இதற்குக் காரணமாகும். புவிசார் அரசியல் பிரச்சினையும்.
பூகோள அரசியல் பிரச்சினையும். லிபரல் இனவாத மோதல்களும்.
இனப்பிரச்சினையும் இந்த விவகாரத்தில் சிக்கிக் கிடக்கின்றன.


தற்போதைய சூழலை மிக நுணுக்கமாக அவதானித்தால் இந்த நெருக்கடியுடன் சம்பந்தப்பட்ட
தரப்புகள் அனைத்தும் நெருக்கடி மைதானத்தில் தங்கள் தங்கள் நலன்களிலிருந்து தீவிரமாக
விளையாடுவதை அவதானிக்கலாம். இங்கே விளையாடாமலும்.  மைதானத்தின் பக்கம் செல்லாமலும் இருக்கின்ற ஒரேயொரு தரப்பு தமிழ்த்தரப்பு தான். இதனால் இந்த மைதானத்தில் தமிழ் மக்களின் நலன்கள் ஓரமாக பேசப்படுகின்றனவே தவிர மைய நிலையில் இன்னமும்
பேசப்படவில்லை.

  1. தமிழ்த்தரப்பு இந்த நெருக்கடி மைதானத்தில் விளையாடாமல் ஒதுங்கி நிற்பதற்கு
    பிரதானமாக மூன்று காரணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது 2009 ம்
    ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
    கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியலை பின்பற்ற முனைந்தமையாகும். மலையக
    முஸ்லீம் அரசியல் போல யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை அனுசரித்துச் செல்லும்
    ஒரு போக்கு பின்பற்றப்பட்டது.
  2. இரண்டாவது நெருக்கடி மைதானத்தில் தனித்தரப்பாக பங்கு
    கொள்ளக் கூடிய கௌரவமான பங்கு தமிழ்த்தரப்பிற்கு உண்டு என்பதை புரிந்து
    கொள்ளாமையாகும்.
  3. மூன்றாவது தமிழ்த்தேசிய அரசியல் கட்சி அரசியலிடம்

சிக்கிக்கொண்டமையாகும்.

மரபு ரீதியாக கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியல் தமிழ்த்தேசிய
அரசியலின் மைய நீரோட்டத்தில் இருக்கவில்லை. வரலாற்றின் சில சந்தர்ப்பங்களில்
மைய நீரோட்ட அரசியலில் இருந்தவர்கள் கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியலை
பின்பற்ற முனைந்தாலும் அவர்கள் தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டனர். இதனால்
கொழும்புடனான காதலை மையநீரோட்ட அரசியல் சக்திகள் நீண்டகாலம் பின்பற்ற
முடியவில்லை

.

தமிழ் இன அரசியல் 1921  ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி சேர் பொன்
அருணாசலம் இலங்கைத்தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ் மாகாஜனசபையை
ஆரம்பித்ததுடன் தொடக்கி வைக்கப்பட்டது.  தொடர்ந்து சுதந்திரம் வரை எதிர்ப்பு அரசியலே நிலவியிருந்தது.

சுதந்திரத்தைத் தொடர்ந்து தமிழ் அரசியலில் மைய நீரோட்ட
அரசியல் சக்தியாக இருந்த அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலைக்
கைவிட்டு கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியலை முதன் முதலாக எடுக்க முற்பட்டது.
அனுசரித்துச் செல்லல் என்பதற்கு அடுத்த கட்டமாக உள்ள பங்கேற்பு அரசியலுக்கே அது
தயாரானது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம்
கைத்தொழில் மீன்பிடி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.


கொழும்புடனான இவரது தேன்நிலவு ஐந்து வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. 1953
ம் ஆண்டு சேர்.ஜோன். கொத்தலாவல பிரதமரானதும் அவரது அமைச்சர் பதவியும்
பறிபோனது. இவரது தேனிலவு காலத்தில் இன அழிப்பு வேலைத்திட்டம் தொடர்பாக ஒரு
சிறிய வெற்றியைக் கூட இவரினால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. சுதந்திரத்தை
தொடர்ந்து அரச அதிகாரக்கட்டமைப்பை சிங்கள மயமாக்குதலையும், தமிழ் மக்கள் ஒரு
தேசமாக இருப்பதை சிதைப்பதையும் ஆட்சியாளர்கள் முடுக்கி விட்டனர். தேசியக் கொடி
உருவாக்கத்தின் போது அரச அதிகாரக் குறியீட்டிலிருந்து தமிழ் மக்கள் தூக்கி
வீசப்பட்டனர். வாளேந்திய சிங்கம் இலங்கையின் இறைமையை குறித்த போது அதற்குள்
தமிழ் மக்களின் அடையாளத்தை இருங்கள் என்ற தமிழ்த்தரப்பின் கோரிக்கையை சிங்களப் பிரதிநிதிகள் புறக்கணித்தனர். இத்தனைக்கும் தேசியக்கொடி உருவாக்கக் குழுவில்
ஜீ.ஜீ.பொன்னம்பலமும் அங்கம் வகித்திருந்தார்

குழுவில் இருந்த இன்னுமோர் தமிழ் உறுப்பினர் செனட்டர் நடேசன் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்துகுழுவிலிருந்து வெளியேறிய போதும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் வெளியேறவில்லை.  அரச விசுவாசமும்,  அமைச்சர் பதவியும் அவரை வெளியேற விடவில்லை.
கொழும்பை அனுசரிக்கும் அரசியல் மூலம் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் சாதனை
என்பது வடக்கு – கிழக்கில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பரந்தன்
இரசாயனத்தொழிற்சாலை ரூபவ் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை என்பவற்றை உருவாக்கியமை மட்டும் தான். தற்போது அவையும் செயலற்றுக்கிடக்கின்றது.

மறுபக்கத்தில் இந்தக் காலத்தில் தான் தமிழர் தாயகத்தின் கூட்டிருப்பை சிதைக்கும் நிலப்பறிப்பு மேற் கொள்ளப்பட்டது அன்றைய மட்டக்களப்பு தெற்குப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட
கல்லோயாத்திட்டம் சுதந்திரத்திற்கு பின்னரே நடைமுறைக்கு வந்தது. இதற்குப் புறம்பாக
தாயகத்தின் மையமான திருகோணமலை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கி
விடப்பட்டன. உலகில் பின்பற்றப்படும் அனைத்து குடியேற்ற முறைகளும் அங்கு
பரீட்சித்துப்பார்க்கப்பட்டன. இந்தக் குடியேற்றங்களைத் தடுக்க முடியவில்லை.
ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அனுசரிப்பு அரசியலினால் சிறிது கூட முடியவில்லை.

தொடர்ந்து 1956 இல் தனிச்சிங்களச் சட்டம் அறிமுகமான பின்
ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் ஆதிக்க அரசியல் முடிவுக்கு வந்தது. 1949 ம் ஆண்டு மலையக
மக்களின் பிரஜாவுரிமைப்பறிப்பு, ஜீ.ஜீ.யின் கொழும்பு அனுசரிப்பு அரசியல்
என்பன காரணமாக தந்தை செல்வா தலைமையில் 1949 டிசம்பரில் அகில இலங்கைத் தமிழரசுக்
கட்சி உருவான போதும் 1956 ம் ஆண்டு வரை ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் செல்வாக்கினை
மீறி மேலெழ முடியவில்லை. தமிழரசுக்கட்சியின் கூட்டங்கள்
காங்கிரஸ்கட்சிக்காரர்களினால் கல்லெறிந்து குழப்பப்பட்டன

இந்த ஆதிக்கம்  தனிச்சிங்களச் சட்டம் அறிமுகமானதுடன் கீழிறங்கியது. 1956 ம் ஆண்டு தேர்தலில் அகில இலங்கை தமிழ காங்கிரஸ் ஒரு ஆசனத்தை மட்டும் பெற்று படு தோல்வியடைந்தது. இதன் பின்னர் இடம் பெற்ற காலி முகத்திடல் சத்தியாக்கிரக போராட்டம் (1956) திருமலை யாத்திரை (1956),  சிறீ எதிர்ப்புப் போராட்டங்கள் (1957 – 1958),
கச்சேரிகள் முன்னால் சத்தியாக்கிரக போராட்டம் (1961),  என்பன
தமிழரசுக்கட்சியின் ஆதிக்க நிலையை நிரந்தரமாக்கின. பண்டா – செல்வா ஒப்பந்தம்
(1957),  டட்லி – செல்வா ஒப்பந்தம் (1965) என்பன கைச்சாத்திடப்பட்டன. இதில் ஒரு
ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. மற்றைய ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது என்பது
வேறு கதை. 1965 ம் ஆண்டு தமிழரசுக்கட்சியும் அனுசரிப்பு அரசியலுக்கு சென்றது.
ஆனாலும் அதற்கான நியாயப்பாடுகளை வலுவாக முன்வைத்தது. 1965 ம் ஆண்டு
கைச்சாத்திடப்பட்ட டட்லி – செல்வா ஒப்பந்தப்படி மாவட்ட சபைகளை
நடைமுறைப்படுத்துவதற்காகவும், தமிழ் மொழி விசேட மசோதாவை தாயகத்தில்
நடைமுறைப்படுத்துவதற்காகவும், அனுசரிப்பு அரசியலின் அடுத்த கட்டமான பங்கேற்பு
அரசியலை மேற்கொள்ளப்போவதாகக் கூறியது.

தலைமை மட்டத்தில் இருந்தவர்கள் எவரும்
அமைச்சர் பதவியை ஏற்காமல் மு.திருச்செல்வம் அமைச்சர் பதவி ஏற்று உள்;ராட்சி
அமைச்சரானார். இந்தப் பதவி நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருகோணமலை கோணேஸ்வரத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதை முதலில் ஆதரித்த பிரதமர் டட்லி சேனநாயக்கா சேருவல புத்த பிக்குவின் எதிர்ப்பைத் தொடர்ந்து திருச்செல்வத்திடம் கலந்துரையாடாமலே புனித பிரதேசத்திட்டத்தை நிறுத்தி வைத்தார். இதனால் ஏமாற்றமடைந்த மு.திருச்செல்வம் அமைச்சர் பதவியை 1968 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 16 ம் திகதி இராஜினமா செய்தார்.


இவர் இராஜினமா செய்தாலும் 1968 ம் ஆண்டு இறுதி வரை தமிழரசுக்கட்சி அனுசரிப்பு
அரசியலைத் தொடர்ந்து 1968 ம் ஆண்டு இறுதியில் அனுசரிப்பு அரசியலிருந்து
விலகியது. இந்த அனுசரிப்பு அரசியலில் சில நியாயங்கள் இருந்தாலும் இதுவே தமிழரசுக்
கட்சியின் வீழ்ச்சியைக் காட்டி நின்றது. கட்சி அரசியலில் வெறுப்படைந்த தமிழ்
இளைஞர்கள் கட்சி அரசியலுக்கு வெளியே 1968 ம் ஆண்டு ரூடவ்ழத்தமிழர் இளைஞர் இயக்கம்
என்ற அமைப்பினை உருவாக்கினர். சமஸ்டி கோரிக்கையை கைவிட்டு தனிநாட்டு போராட்டத்தை முன்னெடுக்க முனைந்தனர். இந்த முயற்சி பின்னர் தமிழ் மாணவர் பேரவை (1970), தமிழ் இளைஞர் பேரவை (1973), என்பவற்றினூடாக ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்கள் எனவரலாறு வளர்ச்சியடைந்தது. என்பது வரலாறு.

இந்த அனுசரிப்பு அரசியலினால் 1970 தேர்தலில் தமிழரசுக்கட்சி பெரும் வீழ்ச்சியைக் கண்டது. அ.அமிர்தலிங்கம் தனது சொந்தத்தொகுதியான வட்டுக்கோட்டைத்தொகுதியில் தோல்வியடைந்திருந்தார். இந்த வீழ்ச்சியை 1972 ம் ஆண்டு தமிழர் கூட்டணி உருவாக்கத்தின் மூலமே தற்காலிகமாக சரிசெய்து கொண்டது.

ஆயுதப் போராட்டம் தொடங்கிய பின்னர் அனுசரிப்பு அரசியல் என்பது தமிழ்
அரசியலின் மைய நீரோட்டத்தில் இருக்கவில்லை. அதனை மேற்கொள்ளும் துணிவு
எவருக்கும் இருக்கவில்லை மையநீரோட்டத்திலிருந்து விலகிய தரப்புக்கள் மட்டுமே
அவற்றை மேற்கொண்டன. டக்ளஸ்தேவானந்தாவும் ரூபவ் தொடர்ந்து பிள்ளையானும் அதனை
மேற்கொண்டனர். அவர்களால் ஆதிக்க நிலையை பெற்றுக் கொள்ள முடியவில்லை
2009 ம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைமைக்கு வந்த
சம்பந்தன் அனுசரிப்பு அரசியலை தந்திரோபாயமாக மேற்கொண்டார்.

இந்த அனுசரிப்பு அரசியலை 13 வருடங்களாக அவர் மேற்கொண்ட போதும் அதன் அடுத்த
கட்டமான பங்கேற்பு அரசியலுக்கு அவரால் செல்ல முடியவில்லை. 2015 ம் ஆண்டு
உருவான நல்லாட்சி காலத்தில் அனுசரிப்பு அரசியல் உச்ச நிலையில் இருந்தது. இதுவே
2019 தேர்தலில் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும் காரணமாகியது. இந்த அனுசரிப்பு
அரசியலினால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. குறைந்த பட்சம் அரசியல்
கைதிகளின் விடுதலை கூட சாத்தியமாகவில்லை. ஆக்கிரமிப்புக்களையும் தடுத்து நிறுத்த
முடியவில்லை. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியும், கொழும்பில் சொகுசு
வீடும் மட்டும் கிடைத்தது. அனுசரிப்பு அரசியலின் தொடர்ச்சியினால் ஆட்சி
மாறிய போதும் எதிக்கட்சித்தலைவர் பதவி இல்லாமல் போன போதும் சொகுசு வீடும்
மட்டும் தொடர்ச்சியாக இருந்தது.


இந்த அனுசரிப்பு அரசியலால் தான் தற்போதைய நெருக்கடி மைதானத்தில்
தமிழத்தரப்பு தனிக்கொடியுடன் விளையாட சந்தர்ப்பம் இருந்தபோதும் கூட்டமைப்பு ஒதுங்கி
நிற்கின்றது. அனுசரிப்பு அரசியலின் தளபதியான சுமந்திரன் தமிழ்மக்களின்
பிரதிநிதி என்பதிலிருந்து விலகி சிங்கள தேசத்தின் பிரதிநிதியாகவே
மாறிவிட்டார். இதன் உச்ச நிலை தான் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் விலைபேசி
விற்கும் நிலைக்கு கொண்டு சென்றது. 2019 தேர்தல் இவர்களுக்கு வலுவான பாடத்தை கற்பித்த
போதும் அதிலிருந்து கற்றுக்கொள்ள இவர்கள் முயலவில்லை.
தமிழ்த்தரப்பு ஒதுங்கி நிற்பதற்கான ஏனைய இரு காரணிகளையும் அடுத்த வாரம்
பார்ப்போம்

Recommended For You

About the Author: Editor Elukainews