யாழ்.மாவட்டத்தில் 42 பேர் உட்பட வடக்கில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

யாழ்.மாவட்டத்தில் 42 பேர் உட்பட வடக்கில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி யாழ். மாவட்டத்தில் – 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் – 17 பேர், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 10 பேர், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் – 09 பேர்(15, 17, 58 வயது பெண்கள் மற்றும் 21, 31, 37, 47, 65 வயது ஆண்கள்)

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 06 பேர் (13, 24, 48 வயது பெண்கள் மற்றும் 16, 19, 41 வயது ஆண்கள்)

மன்னார் மாவட்டத்தில் – 06 பேருக்கு தொற்று

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை – 06 பேர் (72 வயது பெண் மற்றும் 23, 36, 40, 49, 58 வயது ஆண்கள்)

கிளிநொச்சி மாவட்டத்தில் – ஒருவர் 

தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் (80 வயது ஆண்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் – ஒருவர்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில்  (26 வயது பெண்)

வட மாகாணத்தில் இருந்து பெறயப்பட்டிருந்த 168 பேரின் மாதிரிகள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில்

50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews