சிவகுமாரின் உணணாவிரம் இன்று பிற்பகல் முடித்து வைப்பு…!

தனது இடைநிறுத்தப்பட்ட காவலாளி நியமனத்தை  மீள வழங்கக்கோரி  கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சிவகுமாரின் போராட்டம் இன்று முடித்து பிற்பகல் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பில் மேலும் தெரிய வருவயாவது மனித உரிமைகளுக்கான கிராம அமைப்பின் தலைவர் மு.சதாசிவம் பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரனுடன் நடாத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்தே குறித்த போராட்டம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த காவலாளியின்  நியமனம்  2018 ம் அண்டு தொடக்கம் பணி இடை நிறுத்தப்பட்டிருந்ததுடன் வேண்டுமென்றே குறித்த காவலாளியின் மீதான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளாது இழுத்திக்கப்பட்டுருந்தாகவும் இந்நிலையில் தனது வாழ்வாதரத்திறக்காகவே  உண்ணாவிரதமிருந்டாக போராட்டவாதியான சிவகுமார் தெரிவித்தார். இந்நிலையில் மனித உரிமைக்கான கிராமம் அமைப்பின் தலைவர் மு.சதாசிவம்
தவிசாளருடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் தாம் எதிர்வரும் 15/08/2021 ம் திகதி ஒழுக்காற்று விசாரணை நடாத்துவதாகவும் அதன் பின்னர் இவர் தொடர்பில் இறுதி முடிவெடுப்பதாகவும் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் அவரது காப்பாளரான திரு கணேசமூர்த்தி குளிர்பானம் கொடுத்து முடித்துவைத்தார்.
இதில் மனித உரிமை கிராமம் அமைப்பின் யாழ்ப்பாண இணைப்பாளர்  புருஷோத்தமன், அதன் தலைவர் மு.சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் குறித்த போராட்டம் முடித்து வைக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews