பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி…!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.

இன்று மு.ப. 11.15 மணியளவில் பாராளுமன்ற வளாகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை சபை முதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர மற்றும் இந்திக அநுருத்த ஆகியோர் வரவேற்று சபை மண்டபத்துக்குள் அழைத்து வந்தனர்.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை-President Gotabaya Rajapaksa Visits Parliament-Aug-04

அதனை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்  ஜனாதிபதி சபைக்கு வருகைதந்தார்.

சபையில் உறுப்பினர்களின் வாய்மூல விடைகான கேள்விகள் மற்றும் அதற்கான பதிலளிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி நண்பகல் 12.00 மணிவரை சபையில் இருந்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை-President Gotabaya Rajapaksa Visits Parliament-Aug-04

சபையில் இருந்த வேளையில் ஜனாதிபதி பிரதமர், சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பெனாண்டோ ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews