கடல வழியாக இலங்கை வர இருந்தவர் இந்தியாவில் கைது…..!

கடல் வழியாக இந்தியாவிலிருந்து  சட்டவிரோதமான முறையில் படகில் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இலங்கைக்கு தப்பி செல்ல உதவிய ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்டம்  கல்நாட்டினார் குளம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி இலங்கையில் இருந்து பாஸ்போர்ட் மூலம் சென்னை சென்றுள்ளார்.

கீர்த்தனன் தமிழகத்திற்கு சென்று  இரண்டு ஆண்டுகளானதால் வழங்கப்பட்ட விசா காலாவதியானது அவர் விசாவை புதுப்பிக்க இரண்டு முறை முயற்சித்தும் புதிப்பிக்க முடியாததால் தமிழகத்தில் கீர்த்தனன்  சட்டவிரோதமாக தங்கியுள்ளார்.

இதனையடுத்து கீர்த்தனன் இலங்கைக்கு   சட்டவிரோதமாக தப்பி செல்ல முடிவு செய்து ராமேஸ்வரம் புதுரோடு சுனாமி கொலணியை சேர்ந்த முத்துகுமாரனை தொடர்பு கொண்டு தனுஷ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்துள்ளார்.

முத்துக்குமாரன் பணத்தை பெற்று கொண்டு படகில் கீர்த்தனை இலங்கை அழைத்து செல்ல  முயற்சி செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் இருவரும் நாளை காலை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளதாக  போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews