இன்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக மிக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் மக்கள் காத்திருந்து டீசல் நிரப்பி சென்றதை அவதானிக்க முடிந்தது.வடமராட்சியின் பல்வேறு பகுதியில் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் இல்லாத நிலையில் இன்றைய தினம் கொஞ்சம் குஞ்சர் கடை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டுமே டீசல் நிரப்பப்பட்டது.