இனப்படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை.

இனப்படுகொலையைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பியர் பொலிவேரா தெரிவித்துள்ளார்.

தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பிரத்தியேக செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தனது செய்தியில் நீதிக்காகவும், அமைதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் , இந்த இனப்படுகொலையைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews