தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வடமராட்சி கிழக்கு நிர்வாகிகள்  வெளியேறினரா….?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வடமராட்சி கிழக்கு நிர்வாகிகள்  வெளியேறியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

கடந்த மே 17 அன்று  முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தியுடன் சென்ற வடமராட்சி திழக்கு செயற்பாட்டாளர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கும் இடையில்  ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த செயற்பாட்டாளர்கள் ஆவணங்கள் மற்றும்  பொருட்களை வீசி விட்டு அற்கிருந்து வெளியேறியதாகவும்.  நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் சென்றபோது அங்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊர்திக்கு முன்னால்  அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில்  வடமராட்சி கிழக்கு நிர்வாக செயற்பாட்டாளர்கள் பிறிதொரு இடத்தில் தனிமையில் அஞ்சலி செலுத்தியதாகவும்  தெரியவருகிறது.

இதேவேளை குறித்த வடமராட்சிக் கிழக்கு மகளிர் அணி   தமிழ் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரன் அணியுடன் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும். செல்வராசா கஜேந்திரன் தங்களை ஒருவகையான பாகுபாட்டை ஏற்படுத்துவதாகவும்இ  பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மகளிர் உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews