மணல் கள்வர்களால் நாடாளுமன்ற உறுப்பினருக்கே கொலை அச்சுறுத்தல்..!

மணல் கள்வர்கள் தொடர்பாக முறைப்பாடு வழங்கியமைக்காக பிரதேசசபை உறுப்பினரின் வீடு மற்றும் வர்த்தக நிலையம் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் பார்க்க சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று மாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.  0764482667, 0771966429, 0775538710, 0766774024 ஆகிய நான்கு தொலைபேசி இலக்கங்களிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வந்த கரைச்சி பிரதேச சபையின் வட்டார உறுப்பினர் நந்தகுமாரின் வீடும் நேற்றிரவு மணல் மாபியாக்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேதமாக்கப்பட்ட வீட்டினை சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews