கனேடிய நாடாளுமன்ற தீர்மானத்தால் சீற்றம்! கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து கண்டனம் தொிவித்த பீரிஸ்.. |

மே -18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக கனேடிய நாடாளுமன்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இலங்கை தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. 

இலங்கைக்கான பதில் கனேடிய உயர்ஸ்தானிகரை நோில் அழைத்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதுடன்,

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய நாடாளுமன்றில் மே 18ஆம் திகதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கப்பட்டது.

கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இலங்கைக்கான பதில் கனேடிய உயர்ஸ்தானிகர் Amanda Strohan அமண்டா ஸ்ரோகனை, வெளிவிவகார அமைச்சரிற்கு நேற்று அழைத்து ஜி.எல். பீரிஸ் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

கனடாவின் இனப்படுகொலை தீர்மானம் – இலங்கை மேற்கொண்ட உடனடி நடவடிக்கை குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பொய்யானது என வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையினால் இலங்கை தொடர்பில் தவறான எதிர்க்கருத்துக்கள் வெளியிடப்படுவதாக அவர் கூறினார்.

பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள தவறுகளை திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews