எரிபொருள் தாங்கிகளுக்கு தீ வைக்கப்போவதாக அச்சுறுத்தும் கும்பல்..! எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டு செல்லும் வாகனங்களை வழிமறிக்கும் கும்பல் கடுமையான அச்சுறுத்தல் விடுப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜசேகர, இவ்வாறான நடவடிக்கையால் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,

நாடு முழுவதும் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பயணிக்கும் லொறிகளை மடக்கிப் பிடித்து, அங்குள்ள எரிபொருள் நிலையங்களில் தரையிறக்குமாறும், அவ்வாறு இல்லையென்றால் லொறிகளுக்கு தீ வைப்பதாக குறித்த குழுக்கள் அச்சுறுத்தி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுமானால் போக்குவரத்து ஊழியர்களின் நலன் கருதி எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews