ஏறாவூரில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவித்தொகைகள் வழங்கல்.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தின் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஐம்பது (50) குடும்பங்களுக்கு உதவித்தொகைகள் நேற்று வழங்கப்பட்டன.

தியாகி அறக்கொடை நிறுவனத்தினால் தெரிவு செய்து தலா இரண்டாயிரம் (2000) ரூபாய் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன

இன ஐக்கியத்திற்கும் சமூக நலனுக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் ஏறாவூர் ஐயங்கேணி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் மட்டக்களப்பு ஏறாவூருக்கான இணைப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ் ஏறாவூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ.நஜிமுத்தீன். மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஏ.எம்.அஸ்மி. உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான நிதியுதவியினை வழங்கினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews