நாட்டை இல்லாமல் செய்வதற்கே பசில் ராஜபக்ஸ வந்துள்ளார் – விஜயதாஸ ராஜபக்ஸ எம்.பி.

அரசியல் ரீதியாக மஹிந்த ராஜாக்ஷவை இரண்டு முறைகள் இல்லாமல் செய்த பசில் ராஜபகஷ, மூன்றாவது முறையாக நாட்டை இல்லாமல் செய்வதற்கே தற்போது வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,

அமெரிக்க குடியுரிமையை கொண்ட பசில் ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையையும் வைத்துக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வதற்காகவே அரசியலமைப்பின் 20ஆவது சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

20ஆவது சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அரசாங்கத்தின் பக்கம் 150 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை.

இந்நிலையில் 20ஆவது சீர்திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை அரசாங்கத்திலிருந்தும் அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலக்குவதாக உறுதிமொழியளித்து முஸ்லிம் கட்சிகள் இரண்டை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் அவர்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக, கப்பம் பெறுவதை போன்றே அரசாங்கமானது அவர்கள் இருவரையும் வெளியேற்றுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சராக நியமித்தால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமன்றி முழு நாடுமே அழிவுப் பாதைக்கு செல்லும் என்பதை நாம் முன்கூட்டியே கூறினோம்.

பசில் ராஜபக்ஸ யார் என்பதை நாட்டு மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றார்.

Recommended For You

About the Author: admin