பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தெரிவிப்பு!

எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன் என தமிழ்ச்செல்வன் கலக்சன் தெரிவித்தார் நேற்றிரவு வழியாகிய 2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் முதலிடத்தை பெற்று வந்த நிலையில் தனது சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்

நான் சூம் வகுப்பினூடாகவே எனது படிப்பினை மேற்கொண்டேன் எனது அம்மா ஆசிரியர் அப்பா வியாபாரம் செய்கிறார். எனது அம்மா மற்றும் அப்பா ஊக்கமளித்ததன் காரணமாகவும் எனது பாடசாலையின் வகுப்பாசிரியர் மற்றும் எனது ஆசிரியர்களின் ஊக்கத்தின் காரணமாகவே இந்த பெரு வெற்றியைபெற முடிந்தது. அத்தோடு எதிர்காலத்தில் நான் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin