முடங்கிய வடமராட்சி கிழக்கு…..!

கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலிருந்து   கடற்றொழிலுக்கு சென்று இருவர் காணாமல் போயிருந்த   நிலையில் நேற்றைய தினம்  31/01/2022 சடலமாக ஆழியவளை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து தற்போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பணியாளர்கள் எவரும் உள்ளே செல்லாத வகையில் முடக்கப்பட்டு  வடமராட்சி கிழக்கு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இறந்த உறுவுக்கு நீதி வேண்டும், அரச அதிகாரிகளே திரும்பிப்பார், மீனவர்கள் வயிற்றில் அடிக்காதே, உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து, தமிழர்கள் என்றால் நாய்களாக, மீனவர் வாழ்க்கை யார் கையில், எமது கடல் எமக்கு வேண்டும்,  போன்ற கோசங்களை எழுப்பியிருந்தார்கள். பிரதேச செயலக அதிகாரிகள் எவரும் உள்ளே  செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்,  மாகாண, சபை உறுப்பினர் ச.சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.சுரேஸ்குமார், வே.பிரசாந்தன், தவிசாளர் ச.அரியகுமார், பிறேமதாஸ், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி ச.திரவியராசா ஆகியோரும் உட்பட சுமார் ஆயிரம் பேர்வரை கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews