வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதி

கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதியுள்ளதாக  தர்மபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச  வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன்இ அவரது விடுதிக்கு வாகனத்தில் சென்ற சிலரும் அவரை அச்சுறுத்தியமை  தொடர்பில் தரும்புரம்  போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் இதற்கான விசாரணைகள் தருமபுரம் போலீசாரால் முன்னெடுத்து வந்துள்ள நிலையில்  குறித்த  பிரதான சந்தேக நபரை கைது செய்யும் பொருட்டு நீதிமன்ற அனுமதி பெற பட்டிருப்பதாகவும் தெரிவித்த தர்மபுரம் போலீசார்!  குறித்த  சம்பவத்தின் போது கடமையிலிருந்த ஏனையவர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு   செய்யப்பட வேண்டியதுடன் சிசிடி கமரா ஒளிப்பதிகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தர்மபுரம் போலீசார் மேலும் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews