ஓருலைப் பொங்கல் அல்வாய் வடக்கில் சிறப்பாக  இடம் பெற்றது.

சமூக விஞ்ஞான அய்வு மையம், மற்றும் நாம் செய்வோம் அமைப்பும் அல்வாய் வடக்கு மகாத்மா வீதி மக்களும் இணைந்து ஓருலை பொங்கல் நிகழ்வை நேற்று நடாத்தியுள்ளனர்.
பிற்பகல் நான்கு மணிக்கு அல்வாய் வடக்கு மாகாத்மா வீதி சந்தியிலிருந்து சிவகுரு ஆதீன குரு முதல்வர் வணக்கத்திற்குரிய வேலன் சுவாமிகள் தலமையில்  பொங்கல் பானையுடன் வீடு வீடாக சென்று பொங்கல் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பிற்பகல் 5:30 மணிக்கு பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந் நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வணக்கத்திற்க்குரிய வேலன் சுவாமிகள் திருமுன்னிலையில், அரசியல் ஆய்வாளரும்  சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனருமான சி.அ.ஜோதிலிங்கம்,  சமூக விஞ்ஞான ஆய்வு மைய முக்கியஸ்தர்களான திரு கமலகாந்தன், திரு பகீரதன் ஆசிரியர், அல்வாய் வடக்கு மகாத்மா சனசமூக நிலைய தலைவர் திரு யோகநாதன், அல்வாய் வடக்கு சிவ சுப்பிரமணிய தேவஸ்தான தலைவர், முன்பள்ளி ஆசரியர், நாம் செய்வோம் அமைப்பு நடாத்தும்  ஆச்சிரம கல்வி நிலைய ஆசிரியர்கள் மாணவர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் வணக்கத்திற்க்குரிய வேலன் சுவாமிகளின் தமமையில் மாணவர்களுடன் இணைந்த  பஜனையும், சுவாமிகளின் அருளுரையும் இடம் பெற்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews